- அரியலூர் நெடுஞ்சாலை
- அரியலூர்
- சென்னை
- முதன்மை பொறியியலாளர்
- செந்தில்குமார்
- அரியலூர் நெடுஞ்சாலைத் துறை
- விழுப்புரம் வட்டம்
அரியலூர், மார்ச் 16: அரியலூர்ங நெடுஞ்சாலை பராமரப்பு பணியை சென்னை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆய்வு செய்தார். அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட சாலைகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை, விழுப்புரம் வட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலரும் தேசியநெடுஞ்சாலை, சென்னை தலைமைப் பொறியாளரும் பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது சாலைகளை இருபுறமும் முட்புதர்களை அப்புறப்படுத்தவும், பெரிய பாலங்கள் மற்றும் சிறு பாலங்களை வண்ணமிடவும், கிலோ மீட்டர் மற்றும் கற்களுக்கு வண்ணம் அடித்து பராமரிக்கவும், மேலும் சாலைகளை பள்ளமின்றி பராமரிக்கவும் அறிவுறுத்தினார். அது சமயம் ஆய்வின் போது விழுப்புரம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், கோட்டப் பொறியாளர் வடிவேல், உதவி கோட்டப் பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.
