×

கோயில் குளத்தில் தவறி விழுந்து 2 சிறுமிகள் பலி: தலா ரூ.3 லட்சம் நிவாரணம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் உள்ள கோயில் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு கிராமம், தீர்த்தவாரி தெருவில் வசிக்கும் ஐயனார் (எ) கார்த்திகேயன் என்பவரின் மகள்கள் ஹர்ஷினி (வயது 9) மற்றும் கயல் (வயது 7) ஆகிய இருவரும் நேற்று (14.03.2026) மாலை 5 மணியளவில் கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் உள்ள கோவில் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : headmaster ,K. Stalin ,CHENNAI ,MINISTER ,VILUPURAM DISTRICT ,MARAKKANAM VATOM ,Viluppuram District ,Marakkanam Circle ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு...