×

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்.23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது: தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு

5 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினோம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் சிறப்பாக செயல்பட்டனர். தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்குபவை. கலாச்சாரம் மட்டுமின்றி ஜனநாயகத்திலும் 5 மாநிலங்களும் சிறந்து விளங்குகின்றன.

5 மாநிலங்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.  5 மாநிலங்களில் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் உள்ளன. 25 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு வாக்காளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தயாராக உள்ளோம். 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற கணக்கில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களிலும் 824 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளரின் கலர் புகைப்படம் இடம்பெறும்.

5 மாநிலங்களில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்களை வரவேற்கிறோம்.  தமிழ்நாட்டில் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.  தமிழ்நாட்டில் முதல் முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.  தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் மொத்தம் 75,032 வாக்குச்சாவடிகள் உள்ளன.  நகர்ப்புறங்களில் 30,967 வாக்குச்சாவடிகளும் கிராமப்புறங்களில் 44,065 வாக்குச்சாவடிகளும் உள்ளன. வருசநாடு வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது.

தேர்தல் பணிக்காக 1,444 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர்.  தமிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் 100% வெப் கேமரா மூலம் கண்காணீக்கப்படுகிறது. 5 மாநிலங்களில் 3 கட்டங்களகா தேர்தல் நடைபெறஉள்ளது. முதல்கட்டமாக ஏப்.9ம் தேதி அசாம், கேரளம், புதுச்சேரியில் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்.23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் ஏப்.23, 29-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

அசாம், கேரளா, புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29ல் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்.23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.  தமிழக தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6-ம் தேதி கடைசி நாள் ஆகும். ஏப்ரல் 7-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. ஏப்ரல் 9-ம் தேதி வரை வேட்புமனுக்கள் திரும்பபெறலாம்.

தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளம், அசாமில் மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.  அசாம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி நாளை வேட்புமனு தாக்கல் தொங்குகிறது. அசாமில் வேட்புமனுத் தாக்கல் செய்ய மார்ச் 23-ம் தேதி கடைசிநாளாகும். மார்ச்24-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. அசாமில் வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 26-ம் தேதி கடைசி நாளாகும்.  மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்.23,29-ல் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

Tags : Tamil Nadu ,Commissioner ,Chief Election Commissioner ,Ghanesh Kumar ,
× RELATED 5 மாநிலங்களில் உள்ள அனைத்து...