×

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இல்லாத ரூ.20 லட்சம் பறிமுதல்

தண்டையார்பேட்டை: தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில், போலீசார் தீவிர வாகனயில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தி, உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று விஜயவாடா செல்லும் பினாங்கினி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்காக, பல்லாவரத்தை சேர்ந்த சபாபதி (55) என்பவர் பெரிய பையுடன் வந்தார். சந்தேகத்தின் பேரில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், அவரை பிடித்து சோதனை செய்தபோது, அவர் வைத்திருந்த பையில் ரூ.20 லட்சம் இருந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் ரயில்வே போலீசார் அவரை பிடித்து, அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Central Railway Station ,Dandiyarpettai ,Tamil Nadu ,Chennai Central Railway Station ,
× RELATED செல்லப்பிராணிகள் விற்பனை கடையில் ரூ.1.2...