×

100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

திருத்தணி, மார்ச் 14: தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருத்தணி சட்டமன்ற தொகுதியில் 337 வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு பதிவு நடைபெறும். இந்நிலையில், 100 சதவீதம் வாக்குப்பதிவு உறுதிப்படுத்தும் வகையில் கிராமம்தோறும் மின்னணு வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கலை நிகழ்ச்சிகள், பேரணி நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில், ஒரு பகுதியாக திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதை நுழைவு வாயிலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு உறுதிப்படுத்தும் வகையில் வண்ண கோலம் இடப்பட்டது. இதில், வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, வட்டாட்சியர் குமார், வருவாய் ஆய்வாளர் மணி பாரதி ஆகியோர் முன்னிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வருவாய்த்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags : Tiruttani ,Tamil Nadu Assembly ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்