- பல்லாவரம்
- டி. ஆர் பாலு
- தாம்பரம்
- திருநீர்மலை
- அனகாபுத்தூர்
- பம்மல்
- குரோம்பேட்டை
- பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி
- தம்பிராமம் கழகம்
- பாராளுமன்ற
தாம்பரம்: பல்லாவரம் சட்டமன்ற தொகுதி, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருநீர்மலை, அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைத்துத் தர வேண்டும் என சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் மேற்கண்ட பகுதிகளில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டது.
இதனை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏ இ.கருணாநிதி, மேயர் க.வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
