×

தக்கலையில் நவீன பஸ் நிலையம் நாளை முதல் செயல்படும் நகர்மன்ற தலைவர் அருள்ேசாபன் அறிவிப்பு

தக்கலை, மார்ச் 14: தக்கலையில் நவீன பஸ் நிலையம் நாளை (15ம் தேதி) முதல் செயல் பாட்டுக்கு வரும் என நகர்மற்ற தலைவர் தெரிவித்துள்ளார். பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள் சோபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தக்கலையில் பத்மநாபபுரம் நகராட்சி காமராஜனர் பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 6.39 கோடியில் நவீன பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது. இதையடுத்து 2024ல் முதல்வர் மு.க. ஸ்டாலினால் காணொலி மூலம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது.

இதனிடையே குமரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த முதல்வர் பஸ் நிலையம் கடந்த மாதம் 25ம் தேதி காணொலி மூலம் திறந்து வைத்தார். எனினும் ஒரு சில காரணங்களால் பஸ் நிலையம் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர இயலவில்லை. பஸ்நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இரண்டு அடுக்கு கொண்ட வணிக வளாகத்தில் பெரும்பாலான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. பயணிகள் நலனை கருத்தில் கொண்டு பஸ் நிலையம் நாளை (15ம்தேதி) காலை முதல் செயல் பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நகராட்சி ஆணையாளர், துணைத்தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பஸ்கள் உள்ளே வந்து செல்லும். எனவே பயணிகள் காலை 10 மணிக்கு மேல் நவீன பஸ் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Thakkalai ,Municipal Chairman ,Arul Sophan ,Padmanabhapuram ,Padmanabhapuram Municipality ,
× RELATED வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்