- தூத்துக்குடி
- பறக்கும் அணி
- நிலையான கண்காணிப்பு குழு
- துணைப் பகுதி மேம்பாட்டு அலுவலர்
- பழனிசெல்வி
- ரோச் பார்க்
- தூத்துக்குடி...
தூத்துக்குடி, மார்ச் 17: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி நேற்று மாலையில் தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசெல்வி தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது இவ்வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். காரில் வந்த மாரிக்கண்ணன் என்பவர் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பணம் வைத்திருந்ததும், அதற்கான எந்தவித ஆவணங்களும் வைத்திருக்கவில்லை என்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
