×

உணவகங்களில் வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்திய 8 பேர் மீது வழக்கு

புதுச்சேரி, மார்ச் 17: இஸ்ரேல்- ஈரான் போர் காரணமாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் செய்வதில் ஏற்பட்ட தட்டுப்பாடு நாடு முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்பட்டது. இதைபோல், புதுச்சேரியிலும் சிலிண்டர் விநியோகம் செய்வதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் புதுச்சேரியில் உள்ள கேஸ் ஏஜென்சிகளுக்கு பொதுமக்கள் படையடுத்து சென்றனர். புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிலிண்டர், பெட்ரோல், டீசல் குறித்து அவசர ஆலோசனை கூட்டத்தில், புதுவையில் தேவையான அளவு பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் இருப்பதாகவும், பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், பெட்ரோல், டீசல்களை கேன்களில் விநியோகம் செய்வதையும், வீட்டு உபயோக சிலிண்டர்கள் வணிகத்துக்கு பயன்படுகிறது என்று உணவு பாதுகாப்பு துறை சார்பில் 6 குழுக்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய போலீசார் கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புதுவை முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்படி, வீட்டு உபயோக சிலிண்டர்களை உணவகங்களில் பயன்படுத்திய பாகூரை சேர்ந்த ராஜ்குமார், அரியாங்குப்பத்தை சேர்ந்த சேகர் (47), அமனுல்லா (63) தெய்வசிகாமணி (40), அரியாங்குப்பத்தை சேர்ந்த கிருஷ்ணன் (42), வில்லியனூரை சேர்ந்த நமச்சிவாயம் (55), லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ஜான்சான் (50), ஆரியப்பாளையம் சேர்ந்த சிவசங்கர் (36) ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் தனித்தனியாக உணவுப்பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குபதிந்து விசராணை நடத்தி வருகின்றனர்.

Tags : Puducherry ,Israel-Iran war ,
× RELATED புதுவையில் 30 தொகுதிகளில் தவெக தனித்து போட்டி