×

சார்பதிவாளர் ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு: ரூ.4.48 லட்சம் சிக்கியது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை மேலபஜார் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள், திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு பல்வேறு ஆவணங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்பதாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் போலீசார் நேற்று மாலை கழுகுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் சார்பதிவாளர் செல்லப்பாண்டி மற்றும் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 500 பணம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சார்பதிவாளர் செல்லப்பாண்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Registrar's Office ,Thoothukudi ,Kalagumali Melabazar ,Thoothukudi district ,Registrar's Office… ,
× RELATED நடிகை ஸ்ரீதேவியின் சொத்து தொடர்பான...