×

அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்! மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்துவோம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு..!

சென்னை: அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்! மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்துவோம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்;

#DravidianModel-இல் உருவான 2 #TIDELPark மற்றும் 16 #NeoTIDELPark!

கணினித் துறையில் தமிழ்நாடு உயர்ந்திடத் தலைவர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் உருவானவை டைடல் பூங்காக்கள்.

கடந்த 2016-21 அ.தி.மு.க. ஆட்சியின் இறுதிக்காலத்தில் ஒரே ஒரு டைடல் பூங்காவுக்கு மட்டுமே அடிக்கல் நாட்டினர். நமது #DravidianModel ஆட்சியில், அவர்கள் அடிக்கல் நாட்டிய பட்டாபிராம் டைடல் பூங்காவை விரைந்து முடித்துத் திறந்தது மட்டுமல்ல, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், காரைக்குடி ஆகிய ஏழு இடங்களில், சுமார் 4,200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் #NeoTIDELPark-களை நிறுவித் திறந்து வைத்துள்ளோம்.

இதுமட்டுமின்றி, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு இடங்களில், சுமார் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் #TIDELPark-களும், திருவண்ணாமலை, இராசிபுரம், நாகர்கோயில், திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய ஒன்பது இடங்களில், சுமார் 5,400 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் #NeoTIDELPark-உம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

வளர்ச்சியைப் பரவலாக்கி, அனைத்து மாவட்டங்களையும் – அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்! மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்துவோம்! #வெல்வோம்_ஒன்றாக! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil ,Mu. ,K. Stalin ,Chennai ,Principal ,Mu. K. Stalin ,#TIDELPark ,#NeoTIDELPark ,Tamil Nadu ,
× RELATED சிலிண்டர் தட்டுப்பாட்டால் ரயில்களில்...