தெஹ்ரான்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பீப்பாய் ஒன்று 100 டாலராக உயர்ந்துள்ளது. மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 13வது நாளாக இன்றும் நீடித்தது. இப்போரால், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் பயணிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
2 நாட்களுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை 119.5 டாலர் வரை உயர்ந்திருந்தது. போர் விரைவில் முடியும் என டிரம்ப் அறிவித்த நிலையில் கச்சா எண்ணெய் விலை 2 நாட்களாக குறைந்து வந்தது. கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பீப்பாய் ஒன்று 100 டாலராக உயர்ந்துள்ளது.
