×

திண்டுக்கல்லில் ரூ.10 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணி: அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்

திண்டுக்கல், மார்ச் 12: திண்டுக்கல்- திருச்சி சாலையில் உள்ள காட்டாஸ்பத்திரி அருகே வ.உ.சிதம்பரம் பிள்ளை சிலை உள்ளது. இதனருகே மாநகராட்சி சார்பில் ரூ,10 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர், பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, ஆணையர் செந்தில் முருகன், மாவட்ட நிர்வாகிகள் காமாட்சி, பிலால் உசேன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, மாநகர பொருளாளர் சரவணன், மண்டல தலைவர்கள் ஜான் பீட்டர், கார்த்திக், ஆனந்த், மாமன்ற உறுப்பினர்கள் மார்த்தாண்டன், செந்தில்குமார், மாரியம்மாள், ஜோதிபாசு, அருள் வாணி, குலோத்துங்கன், பகுதி பொறுப்பாளர்கள் சந்திரசேகர், ஜானகிராமன், பஜ்லுல் ஹக், ராஜேந்திரகுமார், சந்தோஷ், தொழிலதிபர் பி.எஸ்.என்.ஏ.ரகுராம், பிள்ளைமார் அமைப்பு நிர்வாகிகள் சந்திரசேகர், தனபாலன், மாவட்ட விவசாய அணி கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Dindigul ,Minister ,I. Beryasami ,Kataspatri ,Dindigul- Trichy Road ,Chidambaram Pillai ,Bhumi Pooja ceremony ,Saravanan ,
× RELATED உரிய ஆவணமின்றி ரயிலில் கொண்டு வந்த ரூ.80 லட்சம் பறிமுதல்