×

சுரண்டை அருகே சுப்பையாபுரத்தில் ரேஷன்கடை திறப்பு விழா

சுரண்டை,மார்ச் 12: சுரண்டை அருகே சுப்பையாபுரத்தில் ரேஷன் கடையை பழனிநாடார் எம்எல்ஏ, மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் திறந்து வைத்தனர். சுரண்டை அருகே உள்ள சுப்பையாபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கடையநல்லூர் யூனியன் துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜெயா ஐயப்பன், குலையநேரி ஊராட்சி மன்ற தலைவர் சீதா பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் ஐயப்பன் வரவேற்றார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் கவுன்சிலர் வேல்முத்து, திருமலைக்கனி, ஊர் நிர்வாகிகள் துரைச்சாமி,சக்திவேல், பாலமுருகன், குமார், வைத்திலிங்கம், இளைஞர் அணி அசோக், திருமலை குமார், மாடசாமி செல்லக்கனி, தங்கராஜ், ஈஸ்வரன், மாரி செல்வம், சேகர், பாஸ்கர், களஞ்சியம், செல்வம், கனியம்மாள், சிவகாமி, சீனியம்மாள் மற்றும் ஏராளமான திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Subbaiyapuram ,Surandai ,MLA Palani Nadar ,DMK ,Jayapalan ,
× RELATED உரிய ஆவணமின்றி ரயிலில் கொண்டு வந்த ரூ.80 லட்சம் பறிமுதல்