×

டூவீலர் மீது கார் மோதி விபத்து

 

தேவதானப்பட்டி, மார்ச் 11: வைகை அணை பொதுப்பணித்துறை குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்திக்(27). இவர் நேற்று முன்தினம் தேவதானப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஜெயமங்கலத்தை அடுத்த தனியார் காபி கம்பெனி அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது கார் வலது பக்கம் திரும்பவும் டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கார்த்திக் தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Devadhanapatti ,Karthik ,Vaigai Dam Public Works Department ,Jayamangalam… ,
× RELATED உரிய ஆவணமின்றி ரயிலில் கொண்டு வந்த ரூ.80 லட்சம் பறிமுதல்