- சர்வதேச மகளிர் தினம்
- தேனி என்.எஸ் கல்லூரி
- பிறகு நான்
- தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- தேனி மேலப்பேட்டை
- நாடார்கள்
- உரவின்முறை
- ஜனாதிபதி
- Dharmarajan
- துணை ஜனாதிபதி
- ஜீவகன்
தேனி, மார்ச் 11: தேனி நாடார் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா மற்றும் மகளிர் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் தர்மராஜன், உபதலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் எம்.எம்.ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சித்ரா வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர்கள் மாறன்மணி, ராதாகிருஷ்ணன் வாழ்த்தி பேசினர். விழாவில் கல்லூரியின் முன்னாள் மாணவியர்கள் கலந்து கொண்டனர். அப்போது, இக்கல்லூரியில் பயின்று முடித்து பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவிகளான சக்தீஸ்வரி, அபிநயா, நித்யாமுத்துக்கிருஷ்ண்ன், பராசக்தி, ஜனனி ஆகியோருக்கு ஐகானிக் மகளிர் விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் நிறைவாக கல்லூரி துணை முதல்வர் சுசீலாசங்கர் நன்றி கூறினார்.
