- மகளிர் தினம்
- ஆசிரியர் கூட்டணி
- காரைக்குடி
- உலக மகளிர் தினம்
- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டணி
- மாவட்ட மகளிர் வட்ட அமைப்பு
- ஜனாதிபதி
- ஜெயலட்சுமி
- துணை ஜனாதிபதி
- தமிழுமணி
- ராஜலட்சுமி
- உமா
- கௌதா
காரைக்குடி, மார்ச் 11: காரைக்குடியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட மகளிர் வளைய அமைப்பு தலைவர் ஜெயலட்சுமி வரவேற்றார். துணைத்தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் ராஜலட்சுமி, உமா, கவுதா, மரியசெல்வி, குணவதி, சினேகவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். லட்சுமி கருத்தரித்தல் மைய நிறுவனர், இயக்குநர் டாக்டர் பாக்கியலட்சுமி ஜோதிகணேஷ் பரிசுகளை வழங்கி பேசுகையில், ‘‘பெண்கள் எப்போதும் சாதனையாளர்கள் தான். ஆசிரியர்கள், கலெக்டர், டாக்டர்களாக நாம் பெரிய வெற்றியை அடைந்துள்ளோம். அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். கல்வி, அரசியல், அறிவியல், விஞ்ஞானம், தொழில் என அனைத்திலும் பெண்கள் முத்திரைபதித்து வருகின்றனர். அனைத்து விதமான பெண்களுடன் நான் பயணிக்கிறேன்.
