×

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது

உளுந்தூர்பேட்டை, மார்ச் 11: உளுந்தூர்பேட்டை போலீசார் அந்த வழியாக வந்த ஒரு அரசு பேருந்தை மடக்கி சோதனை செய்தனர். அதில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் திருப்பூர் மாவட்டம் முருகன்பாளையம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் மகன் பாரதிராஜா (31), சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த அன்பரசு மகன் சிவபாலன் (27) என தெரியவந்தது. இவர்கள் இருவரும் ஆந்திராவில் இருந்து 4 கிலோ கஞ்சாவை கடத்திக் கொண்டு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் விழுப்புரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Andhra Pradesh ,Ulundurpet ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்