×

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கடலூர், மார்ச் 11: கடலூர் புதுநகர் காவல் நிலைய எஸ்ஐ உலகநாதன் மற்றும் போலீசார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடலூர் மஞ்சகுப்பம் மணிகூண்டு அருகே சந்ததேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் விற்பனை செய்ய கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், குண்டு உப்பலவாடி பகுதியைச் சேர்ந்த வாசு மகன் பிரதீப்(25) என தெரியவந்தது. இது குறித்து கடலூர் புதுநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags : Cuddalore ,Cuddalore Pudunagar Police Station ,SI ,Ulaganathan ,Manjakuppam ,Manikoondu ,Cuddalore… ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்