நாமக்கல், மார்ச் 11: நாமக்கல் பரமத்தி சாலையில் அமைந்துள்ள பாவை மகாலில், வருட இறுதியை முன்னிட்டு, கேரளா பர்னிச்சர் எக்ஸ்போ வரும் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல், இரவு 9.30 மணி வரை நடைபெறும். இக்கண்காட்சியில் வீட்டிற்கு தேவையான பர்னிச்சர்கள், உயர்ந்த தரத்தில் குறைந்த விலையில் உற்பத்தி விலையிலேயே கிடைக்கிறது. உலக புகழ்பெற்ற மைசூர் கேண்ட் கார்விங் பர்னிச்சர்கள், எங்கள் காம்போ ஆஃபரில் கட்டில் வாங்குபவர்களுக்கு மெத்தை இலவசமாக வழங்குகிறோம். நீலாம்பூர் தேக்கு மர வகைகளால் வடிவமைக்கப்பட்ட பர்னிச்சர்கள், சோபா கம்பெட், மேஜிக் பெஞ்ச் ஒரே இடத்தில் 60 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. 200க்கும் மேற்பட்ட விதவிதமான பர்னிச்சர்களை தாங்கள் விரும்பும் வகையில், எங்களது கம்பெனி தயாரிப்புகளை தள்ளுபடியுடன் பெற்றுச்செல்ல அழைக்கிறோம். மேலும் பண்டிகை தினம் அன்றோ அல்லது தாங்கள் விரும்பும் தேதியிலோ பர்னிச்சரை ஆஃபர் தொகையில் புக் செய்து முன்பணம் கட்டி குறித்த இடத்தில் இலவசமாக டோர் டெலிவரி செய்து தருகிறோம். பர்னிச்சர் எக்ஸ்போவை வாடிக்கையாளர்கள் அனைவரும் பார்வையிட்டு, அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள் என உரிமையாளர் நவ்ஷாத், மேலாளர் பினிஷ் மேத்யூ தெரிவித்தனர்.
