×

கரூர் சுங்ககேட் அருகே ஆமை வேகத்தில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணி'

கரூர், பிப்.11: கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை செல்லும் சாலையில் சுங்ககேட் நிழற்குடை அருகே குடிநீர் குழாய் சீரமைப்பு பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் திணறி வருகின்றன. இந்த பணிக்காக சாலையோரம் மெகா பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, மற்ற வாகனங்கள் இந்த பகுதியின் வழியாக எளிதாக செல்ல முடியாத நிலையும், நிழற்குடை அருகே மக்கள் நிற்க முடியாத நிலையும் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

எனவே, அனைத்து தரப்பினர்களின் நலன் கருதி இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் நடைபெற்று வரும் பணியை விரைந்து முடிக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : drinking water pipe ,Karur Customs Gate ,
× RELATED ஷெரீப் காலனியில் குடிநீர் குழாய் அமைப்பு பணி துவக்கம்