×

வளைகுடா நாடுகளில் தொடரும் போர் பதற்றம் : அனைத்து மாநிலங்களுடன் ஒன்றிய வெளியுறவுத்துறை ஆலோசனை

டெல்லி : வளைகுடா நாடுகளில் தொடரும் போர் பதற்றம் தொடர்பாக அனைத்து மாநிலங்களுடன் ஒன்றிய வெளியுறவுத்துறை ஆலோசனை நடத்துகிறது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உயர் அதிகாரிகளுடன் வெளியுறவுத்துறை ஆலோசனை நடத்த உள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர் விவகாரங்களுக்கான செயலர் ஸ்ரீப்ரியா ரங்கநாதன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்கிறார். வளைகுடா நாடுகளில் சிக்கிய இந்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது.

Tags : Gulf ,United State Department ,Delhi ,State Department ,Secretary for ,Expatriate Indian Affairs ,Shripriya Ranganathan ,
× RELATED 24 , 48 மணி நேரம் டெலிவரி உத்தரவாதம் தபால்...