அருப்புக்கோட்டை, மார்ச் 10: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ராகவேந்திரா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (35). பைனான்ஸ் அதிபரான இவர், கடந்த ஜன.31ம் தேதி வீட்டை பூட்டி விட்டு விளாத்திகுளத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், தினேஷ்குமாரின் வீட்டு கதவை உடைத்து 40 பவுன் நகை, 66 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து தினேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
