×

கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

 

ராமநாதபுரம், மார்ச் 10: சொந்த இடத்தில் வீடு கட்ட விடாமல் தனிநபர் தடுத்து வருவதாக கூறி ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி மாதவன் நகரை சேர்ந்த கதிரேசன். இவர் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த கேணிக்கரை போலீசார் கதிரேசன் மீது தண்ணீரை ஊற்றி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

Tags : Ramanathapuram ,Kathiresan ,Sayalgudi Madhavan Nagar ,Ramanathapuram district ,Ramanathapuram… ,
× RELATED 100 நாள் வேலை திட்ட குறை தீர்ப்பாளர் நியமனம்