×

பிலிகுண்டுலு கிராமத்தில் திமுக கொடியேற்று விழா

தேன்கனிக்கோட்டை, பிப்.11:  அஞ்செட்டி தாலுகா தொட்டமஞ்சி ஊராட்சி பிலிகுண்டுலு கிராமத்தில், திமுக கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ கொடியேற்றி வைத்தார். பின்னர் கிறிஸ்தவர்களின் பாரம்பரிய ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தி, சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, தளி தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர், அஞ்செட்டி ஒன்றிய பொறுப்பாளர் நாகன், முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் காதர்பாஷா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மஞ்சுநாத், அவைத்தலைவர்கள் நாகராஜ், கிரிஸ், துணை செயலாளர் முனிராஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராமு, ரத்தினம், சிவராஜ், கட்சி நிர்வாகிகள் ராஜா, கலைஞர், திம்மராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,flag hoisting ceremony ,Pilikundulu village ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்