சென்னை: வணிக கேஸ் சிலிண்டர் விநியோகம் விவகாரத்தில் தலையிட பிரதமர் மோடிக்கு சென்னை ஓட்டல்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளனர். வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஹோட்டல் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என உரிமையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாட்டால் மருத்துவமனை, ஐ.டி. பார்க், மாணவர் விடுதிகள், பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். வணிக சிலிண்டர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டதாக ஓட்டல்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் ‘வணிக கேஸ் சிலிண்டர் தடையின்றி கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். ஓட்டல்களுக்கு விநியோகம் செய்யப்படும் சிலிண்டர்கள் எந்தத் தடையும் இன்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்’ எனவும் சென்னை ஓட்டல்கள் சங்கம் கோரியுள்ளது.
