×

விபத்தில் தொழிலாளி பலி

ராஜபாளையம், மார்ச் 9: ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் பொன்ராஜ்(33). அருகே உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செந்தமிழ் செல்வி(29). இந்நிலையில் வேலை முடிந்து பைக்கில் சென்ற பொன்ராஜ் சாலையில் உள்ள மணல் சறுக்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை செய்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

 

Tags : Rajapaliam ,Ponraj ,Sokkanathan Puttur Kamarajar ,Rajapalayam ,Senthamil Selvi ,Ponraj Road ,
× RELATED முதல்வர் பிறந்தநாளில் பிறந்த...