- முதல் அமைச்சர்
- அமைச்சர்
- தெற்கு மாநிலங்கள்
- Kariyapatti
- மு.கே ஸ்டாலின்
- Mallanginar
- விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக வர்த்தகர் அணி
காரியாபட்டி, மார்ச் 9: விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மல்லாங்கிணறில் நடைபெற்றது. விழாவில் மார்ச் மாதம் 1ம் தே தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் அன்று பிறந்த குழந்தைகளுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தங்க மோதிரம் பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
அதன் பிறகு பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் பேரூராட்சி தலைவர் துளசி தாஸ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஜெயச்சந்திரன், தலைவர் இன்பம், துணை அமைப்பாளர்கள் முகமது முஸ்தபா சேவுகன், வெங்கடேஷ், மூக்கையன், மலைச்சாமி, சதீஷ் சுந்தர் வழக்கறிஞர் பாலச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
