×

மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

சிவகாசி, மார்ச் 9: சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் எம்.புதுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கண்மாயில் கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்த 2 பேர் மண் அள்ளும் எந்திரம் மற்றும் டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பி சென்றுவிட்டனர். பின்னர் போலீசார் வாகனங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் கிராவல் மண் அள்ளியது சிவகாசி ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் வெள்ளைத்துரை, செவல்பட்டியை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Sivakasi ,M. ,Pudupatti police ,Pudukottai ,Kanmayil ,
× RELATED விபத்தில் தொழிலாளி பலி