- கொல்கத்தா
- புது தில்லி
- மேற்கு வங்கம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கேரளா
- அசாம்
- புதுச்சேரி
- தேர்தல் ஆணையம்
- தலைமை தேர்தல் ஆணையர்
- நனேஷ் குமார்
புதுடெல்லி: மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் ஆயுட்காலம் முடிவடைவதால், ஏப்ரல் மாதத்தில் அங்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு, மேற்கு வங்க மாநிலத்தின் தேர்தல் தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய நேற்று இரவு கொல்கத்தா சென்றது.
கொல்கத்தாவில் அவர்களுக்கு திரிணாமுல் காங்கிரசார் கறுப்புக்கொடி காட்டினர். இன்றும் நாளையும் நடைபெறவுள்ள இந்த ஆய்வில், அரசியல் கட்சிகள், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆய்வுக்குப் பிறகு சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
