×

அபிஷேக் அதிரடியால் ஷேக் ஆன நியூசிலாந்து

உலகக் கோப்பை டி20 லீக் போட்டிகளிலும், சூப்பர் 8 சுற்று போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து நடந்த அரையிறுதிப் போட்டியிலும் இந்திய துவக்க வீரர் அபிஷேக் சர்மா சிறப்பாக ஆடாமல் ரசிர்களின் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். அவரை அணியில் இருந்து தூக்க வேண்டும் என சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் குரல் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடந்த இறுதிப் போட்டியில் விஸ்வரூபம் எடுத்த அபிஷேக் சர்மா, நியூசி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து ரன் வேட்டையாடினார். வெறும் 18 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு அவர் 50 ரன்னை எட்டியபோது ரசிகர்களின் கரவொலி விண்ணை எட்டியது. அவர் அடித்த அரை சதத்தில் 3 சிக்சர், 6 பவுண்டரிகள் அடங்கும். அவருடன் இணை சேர்ந்து ஆடிய மற்றொரு துவக்க வீரர் சஞ்சு சாம்சனும் சிறப்பாக ஆடி கைகொடுத்ததால், இந்திய அணி பவர்பிளேவான முதல் 6 ஒவர்களில் 92 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தது.

Tags : Zealand ,Abhishek ,Abhishek Sharma ,World Cup T20 ,Super ,round ,
× RELATED நடப்பாண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட்...