×

சிறுவனிடம் சில்மிஷம் போதை வாலிபர் போக்சோவில் கைது

 

ஆலந்தூர், மார்ச் 9: மடிப்பாக்கத்தில் வாடகை வீட்டில் குடியிருக்கும் கொத்தனாரின் 14 வயது மகன் அங்குள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 5ம் தேதி பள்ளி முடித்து வீட்டிற்கு சைக்கிளில் புறப்பட்ட சிறுவன், மதுபோதையில் இருந்த மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரம்ம நாத் (36) என்பவரை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளான். அப்போது பிரம்ம நாத் சிறுவனிடம் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார்.

இதுபற்றி சிறுவன் தனது தந்தையிடம் தெரிவித்தார். அவர் பிரம்ம நாத் மீது மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரம்ம நாத்தை கைது செய்தனர். பிறகு மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியதில் சிறுவனிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரம்ம நாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Boxo ,Alandur ,Kothnar ,Folding ,
× RELATED மாதவரத்தில் கல்லூரி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி