மாதவரம், மார்ச் 9: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 29வது வார்டு, வாழை தோப்பு பகுதியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கவுன்சிலர் கார்த்திகேயன் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாதவரம் மண்டல குழு தலைவர் நந்தகோபால் முன்னிலை வகித்தார். சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ கலந்துகொண்டு மாணவ, மாணவிகள் 300 பேருக்கு பேக் போன்ற நலத்திட்ட உதவிகள், மகளிர் தினத்தை முன்னிட்டு 1000 பேருக்கு புடவைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு, வார்டு செயலாளர் பெருமாள், நிர்வாகிகள் மணிவேல், வசந்தமார், வெங்கட், நாகராஜ், இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
