சாத்தான்குளம், மார்ச் 9: சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தை சேர்ந்த தினகரன் ராஜா மனைவி ரோஸ்லின் (42). இவர், சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல ரோஸ்லின் மொபட்டில் காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலம் அருகில் சென்ற போது பின்னால் வந்த வேன் அவரது மொபட் மீது திடீரென மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் ரோஸ்லின் படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் எஸ்ஐ செல்வராஜ், சிறப்பு எஸ்ஐ தர்மர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து வேன் ஓட்டுநர் மணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
