அரூர், மார்ச் 9: உலக மகளிர் தின விழாவை ஒட்டி, அரூர் திமுக அலுவலகத்தில் நகராட்சி தலைவர் இந்திராணி தலைமையில், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக கேக் வெட்டி அனைத்து மகளிருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி துணை தலைவர் சூர்யா தனபால், நகர செயலாளர் முல்லைரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுகுழு உறுப்பினர் கலைவாணி, அனிதா, பிரியங்கா, காயத்ரி, சம்சத், ஜெரினா, அம்பிகா, வினோதினி, தீபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
