×

திமுக கூட்டணிக்கு உத்தவ் சிவசேனா கட்சி ஆதரவு

 

சிவசேனா உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சி தொடர்ந்து இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. சிவசேனா கட்சியின் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் அண்ணாமலை, மாநில தலைவர் ரவிச்சந்திரன், மாநில பொதுச் செயலாளர் சுந்தரவடிவேலன், மாநில துணை தலைவர் செந்தில் மாநில அமைப்பாளர் வேணுகோபால் ஆகியோர் சென்னையில் கடந்த 6ம் தேதி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை சந்தித்து சிவசேனா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அனில்தேசாய் எம்பி அளித்த ஆதரவு கடிதத்தை அளித்தனர்.

இதுகுறித்து சிவசேனா கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘‘எங்கள் கட்சி தேசிய தலைமை அளித்த ஆதரவு கடிதத்தை திமுக பொறுப்பாளரிடம் வழங்கியுள்ளோம். முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒருங்கிணைப்பு குழுவிடமும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்’’ என்றார்.

Tags : Uddhav ,Shiv Sena ,DMK ,Uddhav Thackeray ,India ,Shiv Sena party ,Tamil Nadu ,Annamalai ,state president ,Ravichandran ,state ,general secretary ,Sundaravadivelan ,vice president ,Senthil ,
× RELATED பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத...