×

எஸ்டிபிஐ கட்சி சார்பில் மத நல்லிணக்க இப்தார்

சென்னை: எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது. வடசென்னை வடக்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மகளிர் தின மாபெரும் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் புட்டோ மைதீன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சி தேசிய துணை தலைவர் தெஹலான் பாகவி, ஆர்கே நகர் எம்எல்ஏ எபினேசர், பேராசிரியர் சுந்தரவல்லி, ஷர்மிளா, திமுக சமூக வலைதள மாநில பொறுப்பாளர் டாக்டர் யாழினி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து இப்தார் நிகழ்சி நடந்தது. இதில் மாவட்ட மகளிர் அணி மாவட்ட தலைவர் பஹ்மிதா, நிர்வாகிகள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறந்தனர். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சென்னை 2.0 திட்டத்தின் மூலம் பல இடங்களில் பூங்காக்கள் விளையாட்டு மைதானங்கள் மற்ற பகுதிகளில் ஏற்படுத்தப்படுவதை போல் ஆர்.கே.நகர், திருவொற்றியூர் பகுதியிலும் ஏற்படுத்தி தர வேண்டும், எண்ணூர் விரைவு சாலை டோல்கேட் சிக்னல் பகுதியில் கொரோனா காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 300க்கும் பைக்குகள் கேட்பாரற்று கிடக்கிறது. இதனை உடனடியாக காவல்துறை பொது ஏலம் விட்டு அப்புறப்படுத்த வேண்டும். நார்த் மெட்ராஸ் பள்ளிக்கூடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், பட்டேல் நகர் மாநகராட்சி பள்ளிக்கூடம் அருகில் உள்ள பூங்காவை சீரமைத்து தர வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : STBI ,Chennai ,North Chennai ,North District ,Women's Day ,District ,President ,Butto Maideen ,STBI… ,
× RELATED சொன்னாரு..! செஞ்சாரு..!! அரசுப்பள்ளி...