×

சமூகத்தின் அடிமை விலங்குகளை உடைத்து முன்னேறிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்: துணை முதலமைச்சர்

சென்னை: சமூகத்தின் அடிமை விலங்குகளை உடைத்து முன்னேறிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “பெண்களுக்கான திட்டங்களைச் சலுகைகளாக அல்லாமல், உரிமைகளாக்கி – “வெல்லும் தமிழ்ப்பெண்கள்” என வீறுநடைப் போட செய்திருக்கிறது நம் திராவிடமாடல் அரசு!

இந்தியாவுக்கே வழிகாட்டும் மகளிர் நலத் திட்டங்கள் மென்மேலும் தொடர, மாண்புமிகு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களின் கரத்தை அனைவரும் இணைந்து வலுப்படுத்துவோம்.

மகளிர் உயர மாநிலம் உயரட்டும்!” என பதிவிட்டுள்ளார்.

Tags : Happy World Women's Day ,Deputy ,Chief Minister ,Chennai ,Deputy Chief Minister ,Udayanithistalin ,
× RELATED மகளிர் தினத்தை ஒட்டி மாமல்லபுரத்தில்...