×

காஞ்சி – திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில்

பார்வதி தேவி பசு வடிவெடுத்து பால் சொரிந்து இறைவனை வழிபட்ட தலமாகும். வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த ஒரு பசு சரியாக பால் தரவில்லை. பசு மேய்ப்பவனுக்கு சந்தேகம் வரவே பசுவை பின் தொடர்ந்து சென்று கண்காணித்த போது சிவலிங்கத்திற்கு பால் சொரிவதைக் கண்டான். அவ்விடத்தை சென்று பார்த்த போது சிவபெருமான் மரகதலிங்கமாக சுயம்பு வடிவாக காட்சி கொடுத்தார். அவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டனர். ஞானம் தரும் பாலை பூஜை செய்து கொண்டதால் சிவபெருமானுக்கு ஞானபுரீஸ்வரர் என்று பெயர் வந்தது.

சிவபெருமானின் பசு மேய்ப்பவன் உருவத்தில் திருஞானசம்பந்தரை அழைத்து வந்து காட்சி கொடுத்தார் என்பது வரலாறு. கௌதம முனிவரும் சனற்குமார் வழிபட்ட தலம் என்பது தொன்மை நம்பிக்கை. மேலும், அவர்கள் இறைவனிடத்தில் மழலை செல்வம் வேண்டி அதன் பிறகு வரம் பெற்றார்கள்.பசு மேய்ப்பவராக (இடையன்) வடிவில் தோன்றியதால் இடைச்சுர நாதர் என்ற பெயரும் உண்டு.

திருஞானசம்பந்தரால் தேவார திருப்பாடல் பெற்ற தலம் தொண்டை நாட்டு சிவத்தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள தெய்வங்களுக்கு சூரியன், சந்திரன்,குரு, சுக்கிரன், கேது நாமகரணம் செய்துள்ளது.

* பௌர்ணமி நாளில் சாமிக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் படிப்பில் நல்ல ஞானம், முன்னேற்றம் கிடைக்கும். மேற்படிப்பு எளிதாக அமையும்.
* ஜாதகத்தில் 8ம் பாவகத்தில் எட்டாம் இடத்தில் கேது இருந்தால் குடும்ப வாழ்வில் சில பிரச்னைகள் ஏற்படும். மூல நட்சத்திரத்தன்று சாமிக்கு பாலபிஷேகம் செய்து செந்தாமரை மாலை சாற்றி வழிபட்டு வந்தால் குடும்பத்தில் சந்தோஷம் பிரகாசிக்கும். கணவன்-மனைவி ஒற்றுமையாக வாழ்வார்கள்.
* ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் குரு இருந்தால் தாமதமான குழந்தை பிறப்பு ஏற்படும். இந்த தலத்தில் பூரட்டாதி நட்சத்திரத் தன்று மாம்பழச் சாறில் அபிஷேகம் செய்து அந்த அபிஷேக நீரை வாங்கிப் பருகி வந்தால் புத்திரப் பேறு கிடைக்கும்.
* ஜாதகத்தில் லக்னத்தில் சந்திரன் இருந்தால் சில மன தடுமாற்றங்கள் இருக்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று சாமிக்கு பாலபிஷேகம் செய்து அந்த பாலை வாங்கி பருகி வந்தால் மனம் பலம் பெறும்.
*ஜாதகத்தில் மூன்றாம் பாவகத்தில் சுக்கிரன் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து பாலபிஷேகம் செய்து அத்திப்பழத்தை நைவேத்தியம் செய்து அதனை பக்தர்களுக்கு வினியோகித்து வந்தால் குபேர சம்பத்து கிடைக்கும். மிகவும் பிரசித்திபெற்ற திருத்தலம்.

Tags : Kanchi ,Thiruvadisulam Gnanapuriswarar Temple ,Parvati ,God ,
× RELATED சமயத்தில் வந்தருள்வாள் சமயபுரத்தாள்