- திருக்கணபுரம்
- ராமந்திஸ்வரர் கோயில்
- திருகோணபுரம்
- ரமணந்தீஸ்வரர் திருத்தலம்
- ராமன்
- இலங்கை
- ராமபிரன்
- ராமன் ரவி
- பிரம்மஹாத்தி தோஷ்
- இராவணன்
- அயோதி
- சிவலிங்கா
கிரகங்களே தெய்வங்களாக
திருக்கண்ணபுரம் ராமநந்திஸ்வரர் திருத்தலம். இந்த திருத்தலத்தில் ராமன் வழிபட்டதாக புராணம் உண்டு. இலங்கையில் ராமன் ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தில் விமோச்சனம் அடைவதற்காக ராமபிரான் சிவவழிபாடு செய்தார். இவர் அயோத்திக்கு செல்லும் வழி எங்கிலும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த திருத்தலத்தில் ராமன் சிவலிங்கத்தை வழிபடச் செல்லும் போது ஏதோ மானிடன் என்று நந்தி தடுத்ததாகவும், பின்பு பார்வதிதேவி நந்தியை தடுத்து ராமன் வழிபட உதவியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், ராமநந்தீஸ்வரன் என்பது மருவி ராமநதீஸ்வரம் என்று ஆயிற்று. தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 77வது சிவஸ்தலமாக வருகிறது. ராமநந்தீஸ்வரருக்கு – சூரியன், சந்திரன், வியாழன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளன.
* ஜாதகத்தில் ஆறாம் (6ம்) பாவகம், எட்டாம் (8ம்) பாவகம், பன்னிரெண்டாம் பாவகம் (12ம்) வியாழன் – சனி இணைவு இருந்தால் அது பிரம்மஹத்தி தோஷமாகும். இந்த திருத்தலத்தில் சனிக்கிழமை நீராடி சுவாமிக்கு மாம்பழ சாற்றினால் அபிஷேகம் செய்து அந்த தீர்த்தத்தை பருகி வந்தால் தோஷம் நீங்கப் பெறுவார்கள். புத்திர தோஷம் இருந்தாலும் தோஷம் நீங்கப் பெறுவார்கள்.
* பிரதோஷ நாளில் நந்தி தேவருக்கு அறுகம்புல் மாலையும் விரலி மஞ்சள் மாலையும் கொடுத்து வழிபட்டு வந்தால் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். நல்ல ஞானம் சக்தி ஏற்படும்.
* ஜாதகத்தில் 5ம் பாவகத்தில் சனியோ ராகுவோ இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். ராமதீர்த்தத்தில் நீராடி மாம்பழ அபிஷேகம் செய்தால் தோஷங்கள் குறையும்.
* பித்ருதோஷம் அல்லது பித்ரு சாபம் உள்ளவர்கள் இந்த திருத்தலத்தில் நீராடி தில (எள்) ஹோமம் செய்து சுவாமி தரிசனம் செய்து வந்தால் ஈரேழு ஜென்மங்கள் பாவங்கள் விலகி பித்ருக்களின் ஆசி கிடைக்கப் பெறுவார்கள்.
* புனர்பூசம் நட்சத்திரநாளில் அத்திப்பழம் சுவாமிக்கு நிவேதனமாக கொடுத்து வீட்டிற்கு பிரசாதமாக எடுத்துச் சென்று சாப்பிட்டால் அஷ்ட ஐஸ்வரங்யங்கள் ஏற்படும். தடைபட்ட தனவரவுகள் யாவும்திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
* ஜாதகத்தில் ஒரே பாவகத்தில் சூரியன், சந்திரன் வியாழன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் இணைந்துள்ளவர்கள். இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி அபிஷேகம் அர்ச்சனை செய்து அன்னதானம் தொடர்ந்து செய்தால் அனைத்து தோஷங்களும் விலகி சுபிட்ஷம் உண்டாகும்.
