×

தொகுதி பங்கீடு அறிவிப்பு எப்போ வேணா வரலாம்: நயினாரு சொல்லிட்டாரு

திருச்சியில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் மோடி வரும் 11ம் தேதி திருச்சி பஞ்சப்பூர் அருகே நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இந்த பொதுக்கூட்டத்தன்று அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் ரூ.4 ஆயிரம் கோடிக்கு அதிகமான திட்டங்களை பிரதமர் அறிவித்தார்.

ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் கொடுக்கவில்லை என்கிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளனர். தொகுதி பங்கீடு குறித்து தற்போது ஏதும் சொல்ல முடியாது. நாங்கள் கூட்டணியில் உறுதியாக உள்ளோம். நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தொகுதி பங்கீடு மேற்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Nainar ,BJP ,president ,Nainar Nagendran ,Trichy ,Modi ,Panchpur, Trichy ,
× RELATED கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4,29,394...