×

சங்கீதாவுடன் விஜய் சேர வேண்டும் வேளாங்கண்ணியில் ரசிகர் பிரார்த்தனை

 

நாகை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக அவரது மனைவி சங்கீதா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். மேலும் விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் விஜய் நடிகை த்ரிஷாவுடன் ஒரே காரில் பட்டு வேட்டி, சட்டையில் வந்து இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சங்கீதாவுக்கு விஜய் அளித்த மறைமுக பதில் என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் ரசிகர் ஒருவர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் இணைந்து இல்லற வாழ்க்கையை தொடர வேண்டும் என வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

விஜய், சங்கீதா இணைந்து இருக்கும் புகைப்படத்தை தனது கையில் ஏந்தி பழைய மாதா கோயிலில் இருந்து புதிய மாதா கோயில் வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் அந்த ரசிகர் மண்டியிட்டு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே தஞ்சையில் நடந்த மாநாட்டில் தொண்டர் ஒருவர், சங்கீதா படத்தை காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது ரசிகர் ஒருவர், சங்கீதாவுடன் விஜய் சேர வேண்டும் என்று வலியுறுத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.

Tags : Vijay ,Sangeetha ,Farangani ,Nagai ,Tamil Victory Club ,Sangeetha Parapharappu ,Chengalpattu Court ,Chennai ,
× RELATED விருகம்பாக்கம் – அரும்பாக்கம்...