×

திருச்சி திமுக மாநில மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘ஸ்டாலின் தொடரட்டும்- தமிழ்நாடு வெல்லட்டும்’ என்கிற தலைப்பில் திருச்சி சிறுகனூரில் நாளை மறுநாள் (9ம் தேதி) 10 லட்சம் பேர் பங்கேற்கும் திமுக மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அமைச்சர் கே.என்.நேரு நேற்று மாநாட்டுப் பணிகளை நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த தேர்தலின் போது இதே இடத்தில் மகளிர் உரிமைத்தொகை போன்ற 7 வாக்குறுதிகளை அறிவித்தார். அது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதே போன்று இந்த மாநாட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கின்றோம். ஏற்கனவே அறிவித்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள்.

அதேபோன்று புதிய அறிவிப்புகளோடு சிறந்த மாநாடாக இது அமையும். தேர்தல் அறிக்கையில் இருந்து ஏதாவது ஒன்று, இரண்டு அறிவிப்புகளை இங்கு வெளியிடலாம். நிதிநிலைக்கு ஏற்ப என்ன செய்ய முடியுமோ எதை செய்ய முடியுமோ அதை முதல்வர் அறிவிப்பார். மாநாட்டில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chief Minister ,Trichy Dimuka State Conference ,Minister ,K. N. Nehru ,Dimuka State Conference ,Tamil Nadu Wellatum ,Trichy Siruganur ,K. N. ,
× RELATED அம்மா உணவகங்களில் வாடிக்கையாளர்கள் வருகை 25-50% வரை கணிசமாக அதிகரிப்பு!