×

கில்லி விளையாடும் பசங்கலாம் தள்ளி நிக்கணும்: விஜய்யை பங்கம் செய்த விந்தியா

சேலம் ஆட்டையாம்பட்டியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா பேசியதாவது: இன்று நமது கட்சியை விட்டு எத்தனையோ பேர், மாற்றுக்கட்சிகளுக்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் துரோகிகள் என்பதை முன்கூட்டியே அறிந்த தீர்க்கதரிசி தான் எடப்பாடி பழனிசாமி. அதனால் தான் அவர்கள், எந்த ரூபத்தில் நமது கட்சியில் இணைய வந்தாலும், சேர்த்துக் கொள்ளாமல் இருந்தார் எடப்பாடி.

அவர்களை பற்றி மக்களே உணர்ந்து கொள்வார்கள் என்பதிலும் தெளிவாக இருந்தார். இப்போது அதுவும் நடந்து விட்டது. அவர்கள் போனதால் இலை மீது பனியாக இருந்த சனி போய்விட்டது. இனி எம்ஜிஆர், ஜெயலலிதா போல் எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவின் தனித்தலைவராக இருப்பார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 4ஆண்டுகள் ஆட்சி நடத்திய அனுபவம் அவருக்கு உள்ளது.

அதனால் மீண்டும் அமோக வெற்றியை எதிர்கொண்டு எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். எனவே வரும் தேர்தலில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் தான் போட்டி. மக்களும் அதைதான் சொல்கிறார்கள். எனவே கில்லி விளையாடும் பசங்க (விஜய்) எல்லாம் தள்ளி நிக்கணும். தேவையில்லாமல் களத்தில் நின்று மொக்கையாக கூடாது. இவ்வாறு நடிகை விந்தியா பேசினார்.

Tags : Vindhya ,Vijay ,AIADMK ,Salem's Attaiyampatti ,Edappadi Palaniswami ,
× RELATED நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே...