சென்னை: பாஜகவின் ஜூனியர் கூட்டாளியாகவே அதிமுகவை நான் பார்க்கிறேன் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிருஷ் சோடங்கர் கூறியுள்ளார். அதிமுகவை பாஜக கட்டுப்படுத்தி வருகிறது, வரும் தேர்தலில் தாமாக வெற்றிபெறும் வலிமை அதிமுகவுக்கு இல்லை. திமுக – காங்கிரஸ் கூட்டணி பிளவுபடும் என்ற அவர்களின் கனவு தகர்ந்துபோனது என அவர் கூறினார்
