×

அரசிராமணியில் ₹1.11 கோடியில் சாலை அமைக்க பூமிபூஜை

இடைப்பாடி, பிப்.10:இடைப்பாடி அருகே அரசிராமணி பேரூராட்சியில் செட்டிப்பட்டி சாலை மற்றும் குள்ளம்பட்டி சாலை ஆகியவை ₹1.11 கோடி மதிப்பீட்டில் தார் சாலையாக அமைப்பதற்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் பொன்னையன், சங்ககிரி எம்எல்ஏ ராஜா ஆகியோர் துவக்கி வைத்தனர். அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாஜலம், சங்ககிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன், அரசிராமணி பேரூர் செயலாளர் காளியப்பன், பேரூர் துணைச்செயலாளர் ராஜவேல், பேரவை செயலாளர் பெருமாள், குள்ளம்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணைச் செயலாளர் யுவராஜா, பேரூர் பொருளாளர் குமாரசாமி, முன்னாள் துணைத் தலைவர் முனுசாமி, விவசாய அணி தலைவர் ராமசாமி, விவசாய அணி செயலாளர் செந்தில் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : road ,Arasiramani ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி