×

பேராவூரணி அருகே கூப்புளிக்காட்டில் காமன் பண்டிகை விழா

பேராவூரணி, மார்ச்.4: பேராவூரணி அருகே கூப்புளிக்காடு கிராமத்தில் உள்ள ரதிமன்மதன் கோயிலில் காமன் பண்டிகை விழா நடைபெற்றது. காமன் பண்டிகையை முன்னிட்டு 13 நாட்கள் காப்பு அணிந்து கிராம மக்கள் விரதமிருந்தனர். நேற்று ஆதனூர் ஸ்ரீ வீமநாயகி அம்மன் கோயிலிலிருந்து காவடி, பால்குடம் எடுப்பும், மாலை பேராவூரணி ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் கோயிலிருந்து பூத்தட்டுகள் எடுத்து வரப்பட்டு ரதிமன்மதன் கோயிலை வந்தடைந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இரவு தமிழ் பாரம்பரிய அரிச்சந்திர மயான காண்டம் என்ற வரலாற்று நாடகம் நடைபெற்றது. அதிகாலை ரதிமன்மதன் சுவாமி வீதியுலாவை zழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ரதி மன்மதன் சுவாமி ஆசி பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கூப்புளிக்காடு கிராமத்தினர் செய்திருந்தனர்.

 

Tags : Common festival ,Kuplikat ,Peravoorani ,PERAVURANI ,RATHIMANMADAN ,GOPULIKKADU ,Kavadi ,Aadanur ,Sri Vimanayaki Amman Temple ,
× RELATED உரிய ஆவணமின்றி ரயிலில் கொண்டு வந்த ரூ.80 லட்சம் பறிமுதல்