×

2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேல் முறையீடு: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை

சென்னை: ஆளுநர் குறித்தும் குஷ்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் 10வது மாஜிஸ்திரேட் ரேவதி முன்பு விசாரணைக்கு வந்தது. சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20 ஆயிரமும் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேல் முறையீடு செய்வதற்காக ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது என்று மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மனு இன்று முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Speaker ,Sivaji Krishnamurthy ,Principal Sessions Court ,Chennai ,Kodungaiyur ,Governor ,Khushbu ,Egmore Court ,10th Magistrate ,Revathi ,
× RELATED தமிழ்நாடு-புதுச்சேரி சட்டமன்ற...