×

தீத்திபாளையத்தில் பிளாஸ்டிக் பொருட்களை விற்போர், வாங்குவோருக்கு அபராதம்

தொண்டாமுத்தூர், பிப்.10: கோவை அருகே தீத்திபாளையம் ஊராட்சி மளிகை, ஓட்டல், பெட்டி கடை வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் ஊராட்சி தலைவர் புல்லட் கந்தசாமி தலைமையில் நடந்தது. செயலாளர் கவிதகலா வரவேற்றார். வார்டு உறுப்பினர் ஜெகன் நன்றி கூறினார். கூட்டத்தில், தீத்திபாளையம் ஊராட்சி பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சியாக மாற வியாபாரிகள் ஒத்துழைப்பு அவசியம். முதலில் எச்சரிக்கை, இதையும் மீறி விற்பனை செய்யும் நிறுவனங்களின் தொழில் உரிமம் ரத்து செய்யப்படும். வருங்கால தலைமுறையினரின் நலனை கொண்டு பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம் என உறுதி ஏற்றுக்கொண்டனர்.

வீதிகள்தோறும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பலகை மற்றும் கடைகளில் அறிவிப்புகள் வைப்பது, துணிப்பைகளை கடைகளுக்கு கொண்டு செல்வது, மீறும் பட்சத்தில் பிளாஸ்டிக் பைகளை விற்பவரும், வாங்குபவருக்கும் அபராதம் விற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தினமும் குப்பைகளை அகற்றுவது, இதற்கான இடத்தை தேர்வு செய்வது என கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. இதில், துணைத்தலைவர் ராஜேந்திரன், வார்டு உறுப்பினர்கள் கலாவதி, மஞ்சுளா, அமுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பணி ஓய்வு பிரிவு உபசார விழா பேங்க் ஆப்...