×

மாநில யோகாசன போட்டியில் மதுரை மாணவிகள் அசத்தல்

மதுரை, மார்ச் 3: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் மதுரை லேடி டோக் கல்லூரி மாணவிகள் மகிமா, அக்சயா லட்சுமி ஆகியோர் வெவ்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு முதல் பரிசுகளை பெற்றனர். மாணவி அபிராமி இரண்டாம் பரிசை பெற்றார். பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. பதஞ்சலி யோகா செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தலைவர் மூவேந்தன் முன்னிலை வகித்தார். விழாவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். இதில் கல்லூரி யோகா ஆசிரியர் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Madurai ,Madurai Racecourse Ground ,Trichy ,Tirunelveli ,Lady Dog College ,Madurai… ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்